ஆன்மிக ஒளியின் பாதை

தெய்வீக
தியானம்

உடலாலும், உள்ளத்தினாலும், உணர்வினாலும் இறையோடு ஒன்றி இருந்து, ஆத்மாவிற்குள் இறை ஒளியை உணரும் புனிதப் பயணம்.

10ஆன்மிக நிலைகள்
04முக்கிய பயிற்சிகள்
01இறை ஒளிப் பாதை
எங்கள் அடிப்படை நோக்கம்

இறைவனே ஆத்மாவின் நித்திய உறவு

நோக்கம்

கடவுள் திரு அருளால்

பூமியிலே வாழும் போது ஆயிரம் உறவுகள். இறுதி காலத்தில் தன் ஆத்மாவோடு தனக்கென அழைத்துச் செல்ல இறைவனைத் தவிர யாருமில்லை. ஆன்மிகருக்கு நான் சொல்லும் இறை தியானம் பெரிதும் பயன்பட வேண்டும் என விரும்புகிறேன்.

நன்மை

கடவுள் திரு அருளால்

எந்த இறையையும் இறை ரூபத்தையும் தன் ஆத்மா உள் இழுத்துக் கொள்கிறதோ, அந்த இறையையும் இறை ரூபத்தையும் இறுதி காலத்தில் ஆத்மா அடைகிறது.

அமைதியான மலை மற்றும் ஏரி
அமைதி • ஒளி • ஆனந்தம்
கடவுள் திரு அருளால்

இறை தியானம் என்றால் என்ன?

இறையை வழிபடும் வழிபாட்டு முறைகளில் ஒன்று இறை தியானம். உடலாலும் உள்ளத்தினாலும் உணர்வினாலும் இறையோடு ஒன்றி இருப்பதே இறை தியானம்.

மனதில் இறையை நினைத்து, உள்ளுக்குள்ளே ஆனந்தமாய் இருப்பது தியானம்.

01

இறையை மனதில் நினைத்து தலையை உயர்த்தி, நெற்றியில் இறையின் ஒளியை உணர்வது இறை தியானம்.

02

மனதில் இறையை நினைத்து உள்ளுக்குள்ளே ஆனந்தமாய் இருப்பது தியானம்.

03

வெளியில் நடப்பதை உணராமல் அந்தராத்மாவுக்குள் இறை உணர்வோடு இருப்பது இறை தியானம்.

04

கண்களை மூடி தலையை உயர்த்தி, அகக் கண்களால் இறையின் திருப்பாதங்களை பார்த்து இருப்பது இறை தியானம்.

05

இறையைத் தேடி, இறையை நினைத்து, அவர் ஒளியை தன் ஆத்மாவிற்குள் உள் இழுப்பது இறை தியானம்.

06

கண்களை மூடி நிசப்தமாய் இறையின் ஆனந்த அலையில் தன்னை கரைப்பது இறை தியானம்.

07

இறை சிந்தையாய் இருந்து, இறையை ஞாபகத்துக்குள்ளே வைத்து புண்ணியம் பெறுவது இறை தியானம்.

இறைவன்

பிரபஞ்சத்தின் மூல ஆதாரம்

இந்த பிரபஞ்சத்தின் படைப்பிற்கு மூல ஆதாரமானவரும், இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறவருமே இறைவன்.

அன்புடன்

தெய்வீக தியானம்

தெய்வீக தியானம் என்பது இந்த பிரபஞ்சத்தின் படைப்பிற்கு மூல ஆதாரமானவரும், பிரபஞ்சத்தை இயக்குகிறவருமான அனைத்திற்கும் மேற்பட்ட மகா பெரிய, ஒளி நிறைந்த, ஒளிமயமான இறையை உணர வேண்டிச் செய்யப்படும் தியானம் ஆகும்.

தெய்வீக
ஒளி
என்னைப் பற்றி

இறை அன்பை பகிரும் ஆன்மிகப் பயிற்சி

நான் தெய்வீக தியானம் பயிற்சி அளித்து வருகிறேன். இறையின் மேல் அன்பும், பக்தியும், பாசமும் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பதை விரும்புகிறேன்.

பயிற்சி தொடர்புக்கு

இறை தியான பயிற்சி

மனம், உள்ளம், உணர்வு ஆகியவற்றை இறை சிந்தனையில் ஒருமுகப்படுத்தும் பயிற்சி.

மேம்பட்ட தியான நுட்பங்கள்

ஆன்மிக அனுபவத்தை ஆழப்படுத்தும் மேம்பட்ட இறை தியான முறைகள்.

சுவாச பயிற்சிகள்

உடல் மற்றும் மன அமைதியை வளர்க்க உதவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சுவாச முறைகள்.

சூட்சும இறை உணர் நுட்பங்கள்

அந்தராத்மாவில் இறை உணர்வையும் உள் ஒளியையும் உணரும் நுட்பங்கள்.

ஆன்மிக வளர்ச்சிப் பாதை

இறை தியானத்தின் 10 நிலைகள்

இறை உணர்விலிருந்து இறையோடு சேரும் உன்னத நிலை வரை ஆத்மாவின் உள் பயணம்.

01

இறை உணர்வு

இறைவனை நாம் தியானிக்கும் போது மனசாலும், சிந்தையாலும், உடலாலும், உள்ளத்தாலும் இறையின் மகா பெரிய பரம சக்தியை நாம் உணர முடியும்.

02

உள் தெளிவு நிலை

உள்ளார்ந்த விழிப்புணர்வு, மன மகிழ்ச்சி, சாந்த நிலை, இறை மேல் பயபக்தி மற்றும் ஆத்ம ஸ்னேகம் உண்டாகும்.

03

வெளிச்சம் உள் வருதல்

இறை தியானத்தின் போது இறை ஒளி உள் வருவதை அந்தராத்மா உணரும்.

04

உள் மாற்றம்

ஆத்மா பாவத்துவங்களை விட்டு புதிய பரிமாண மாற்றம் அடையும்.

05

சஞ்சார நிலை

ஆத்மா வீடு, பூமி, மண், மரம், மலை என்று எந்தத் தடையும் இல்லாமல் அனைத்திலும் ஊடுருவிச் செல்வதை தியானத்தில் உணர முடியும்.

06

உள் ஒளி வளரும் நிலை

இறை ஒளி ஆத்மாவுக்குள் வந்து நிறைந்து நிலைகொள்வதை உணர முடியும்.

07

ஒளி பூரண நிலை

இறை ஒளி ஆத்மாவில் நிறைந்து பூரணமாகும் போது ஆத்மா அமிர்த நிலை அடைகிறது; கர்ம வினைகளிலிருந்தும் பூர்வ கர்ம பிறவி பீடைகளிலிருந்தும் விடுபடும் நிலையை நோக்கி உயர்கிறது.

08

ஒளிரும் நிலை

ஆத்மாவுக்குள் இறை ஒளி நிறைந்து முழுமை அடைந்து, ஆத்மா ஒளிரும் நிலையை அடைகிறது.

09

உதி நிலை

ஆத்மா இறையோடு சேரத் தகுதி வாய்ந்த மகா உன்னத நிலையை அடைகிறது.

10

இறுதிக் காலத்தில் ஆத்மா இறையோடு சேரும் நிலை

தியானத்தால் பரிபக்குவம் பெற்ற ஆத்மா, இறுதிக் காலத்தில் இறையோடு இணையும் உன்னத ஆன்மிக நிலை.

உங்கள் உள் ஒளிப் பயணத்தை தொடங்குங்கள்

அமைதி, இறை உணர்வு, ஆன்மிக நிறைவு

தெய்வீக தியானப் பயிற்சி தொடர்பான மேலதிக விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

  +91 9047264205     info@dheivegadhyanam.org